ADDED : மே 21, 2026 03:29 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 2005 - 2008ம் ஆண்டுகளில் பி.காம்., படித்த மாணவர்கள் 18 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். முதல்வர் ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கோபதி, தியாகராஜன், ஞானேஸ்வரன், துரைசாமி, சுகன்யா பங்கேற்றனர். முன்னாள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சிவக்குமார், உறுப்பினர் ஹரிஹரசுதன், மூத்த மாணவர் ஜீவன் பங்கேற்றனர். கல்லுாரி செயலாளர் குமரேசன் தலைமையில் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
