ADDED : மே 28, 2026 04:44 AM

அ நிறம் | அளவு
மதுரை: டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரம மேல்நிலைப் பள்ளியில் 1992 மற்றும் 1994ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் இந்திரா வரவேற்றார். 'நான் அன்றும், இன்றும்' தலைப்பில் சுயஅறிமுகம் செய்து பேசினர். பள்ளியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் நாகசாமி வாழ்த்தி பேசினார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் நினைவு பரிசு, கல்லுப்பட்டி அன்பாலயம் அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், விஜயகுமார், சுந்தரராமன், மாரியப்பன், தீபா, கணேசன் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் சரவணபவன் நன்றி கூறினார்.
