ADDED : அக் 29, 2026 03:52 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் 1996 –2001ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர்.
ஓய்வு பேராசிரியர்கள் அழகர்சாமி, மனோகரன், சுதீர், ராஜலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்களும் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று, கல்லுாரிக் கால நட்புக்களை நினைவுகூர்ந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் குழு ஏற்பாடு செய்தது.
