/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அம்பேத்கர் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி'
/
'அம்பேத்கர் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி'
ADDED : ஏப் 13, 2025 05:35 AM

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக எஸ்.சி., -எஸ்.டி., ஊழியர் நலச்சங்கம் மற்றும் 'பே பேக் டூ சொசைட்டி' சார்பில், 'ஜனநாயகம் கற்போம்' கருத்தரங்கம், பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது.
அதில் பங்கேற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்து பேசியதாவது: உலகம் முழுவதும் பெரும்பான்மை என்பது, அரசியல் அடிப்படையில் அல்லது கருத்தியல் அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஜாதி, மத பெரும்பான்மையை, தேவையான இடங்களில் பயன்படுத்த பார்க்கிறார்கள். உரியவர்களின் செவிக்கு எட்ட வேண்டும் என்றால், நாம் நம்மை வலுப்படுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு என்பது, ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலானது. அது தான் சமூக நீதி. அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி தான் அம்பேத்கர். இவ்வாறு அவர் பேசினார்.

