ADDED : மார் 24, 2026 05:00 PM
மேலுார்: தும்பைபட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 13 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன், மந்தை கருப்பண சுவாமி சிலைகள் தும்பைபட்டி மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. மார்ச் 26 மந்தையிலிருந்து சுவாமி சிலைகள் கோயிலுக்கு கொண்டு செல்வர். மார்ச் 27 து.அம்பலகாரன்பட்டியிலிருந்து சுவாமி சிலைகள், பதுமைகளை பக்தர்கள் சுமந்து கோயிலுக்கு கொண்டு செல்வர். பிறகு கரும்பு தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும், மா விளக்கு ஏற்றியும் அங்கப்பிரதட்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவதோடு திருவிழா நிறைவு பெறும்.
வடக்குபுற காளியம்மன் கொட்டாம்பட்டி: வடக்கு புற காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 15 காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று (மார்ச் 25) கோயிலில் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று பாண்டாங்குடி பூசத்தாய் ஊருணியில் கரைப்பதுடன் திருவிழா நிறைவு பெறும்.
