ADDED : ஜன 01, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : அரிட்டாபட்டி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது.
இதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் 2 மாதமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை, அமைப்பு செயலாளர் சரவணன், நிர்வாகிகள் ஆசையன், சோமாசி, ஆனந்த் உள்ளிட்டோர் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.