தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராமேஸ்வரம் வரை 'அமிர்தா' ரயில்

ராமேஸ்வரம் வரை 'அமிர்தா' ரயில்

ராமேஸ்வரம் வரை 'அமிர்தா' ரயில்


ADDED : அக் 16, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: திருவனந்தபுரம் - மதுரை இடையே தினசரி இயக்கப்படும் 'அமிர்தா' ரயில், இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப் படுகிறது.

இன்று (அக். 16) முதல், இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் அமிர்தா ரயில் (16343), மறுநாள் மதியம் 12:45 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் அக். 17 முதல் மதியம் 1:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயில் (16344), மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்கிறது.

நேரம்: ரயில் (16343), காலை 8:35 திண்டுக்கல், 9:50 மதுரை, 10:25 மானாமதுரை, 10:50 பரமக்குடி, 11:13 ராம நாதபுரம் வந்து செல்லும். மறுமார்க்கத்தில் ரயில் (16344), மதியம் 2:13 ராமநாதபுரம், 2:38 பரமக்குடி, 3:05 மானாமதுரை, மாலை 4:05 மதுரை, 5:05 மணிக்கு திண்டுக்கல் வந்து செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us