ADDED : மார் 13, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் சித்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி 80 ஆண்டுகள் அமுத விழா நடந்தது.
ஆசிரியர் பழனிராஜ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் வைஜெயந்திமாலா, ஆசிரியர் பயிற்றுனர் அந்தோணி முத்து, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தீபா பங்கேற்றனர். ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
ஆசிரியர்கள் கிரிஜா, மல்லிகா, கஸ்தூரி வெங்கிட்டம்மாள், ரேவதி ஏற்பாடு செய்திருந்தனர்.
