தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

 ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

 ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்


ADDED : மார் 01, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் பூர்விகம். அதனால் சினிமாவில் மதுரையை சேர்ந்தவர்களிடம் 'நானும் மதுரைக்காரன்தான்'என இல்லாத மீசையை தடவிக் கொடுத்து அறிமுகமாவது எப்போதும் கேலியாக இருக்கும். ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற கனவில் சமூகவியல் சார்ந்து 2 பட்டமேற்படிப்புகள் முடித்தேன். கல்லுாரியில் நீளம்தாண்டுதல் விளையாட்டில் கால் முறிந்ததால் எனது ஸ்போர்ட்ஸ் கனவு கலைந்தது. சின்ன, சின்னதாக சவுண்ட் எபெக்ட்ஸ் மிமிக்ரி செய்வதை அறிந்து இயக்குனர் ஸ்ரீநாத் என்னை மேடையில் ஏற்றி ஊக்கப்படுத்தினார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்துக்கொண்டே ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தினேன். அப்போது நண்பர்கள் மூலமாக தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வாய்ப்பு கிடைத்தது. அது, இது, எது காமெடி நிகழ்ச்சியில் 'ஒத்தரோசா' லேடி கெட்டப்பில் வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள். எதிர்பாராதவிதமாக பிரபலமானேன். அதில் கிடைத்த முகவரியால் தொழிலும் விரிவடைந்தது. தொடர்ந்து டி.வி., நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டே தொழிலையும் கவனித்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் போன் செய்து 'மணிரத்னம் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு, சீக்கிரம் ஆபிசுக்கு வா'எனச் சொன்னார். கிண்டலுக்கு சொல்லியிருப்பாங்க என நினைப் போடு அங்கு சென்றேன். பிறகு தான் கடவுள் அருளால் உண்மையாகவே அழைக்கப்பட்டேன் என உணர்ந்தேன்.

'கடல்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தில் எனக்கான முதல் டயலாக் 'ஸ்தோத்திரம் பாதர்'என சொல்ல வேண்டும் எனச் சொன்னார்கள். அது எனக்கு சென்டிமென்ட்டாக அமைந்தது. அதன்பின் மாரி, விக்ரம் வேதா, தும்பா என துவங்கி டீசல், லோகா வரை 36 படம் நடித்துவிட்டேன். சினிமாவில் டெக்னீசியன், மேக்கிங், ஸ்டண்ட் என வெளித்தெரியாத கலைஞர்கள்தான் உண்மையான ஹீரோ.

பழைய திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன். அதில் ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, மணிவண்ணன், இளவரசு, தம்பி ராமையா போல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. அந்த டிராக்கில்தான் சென்றுக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொடூரமான சைக்கோ வில்லன் போன்ற வித்தியாசமான கேரக்டர்கள் செய்யவும் ஆசை. இதை சொல்வதால் நான் தைரியமான ஆளென்று நினைத்து விடாதீர்கள். கொஞ்சம் பயந்த சுபாவம்.

இத்தனை ஆண்டு சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, தேதி பிரச்னையால் தவறிபோனது தான் வருத்தமான விஷயம். எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தரும் என்பதால் விருதுகளுக்கு நான் ஆசைப்பட்டதில்லை. இன்ஸ்டா, யுடியூப், பேஸ்புக் என டிரெண்டிங்கில் உள்ளவர் களிடம் நடிகர்களை சினிமாக்காரர்கள் தேடுகிறார்கள். பழைய நடிகர்களை கண்டுகொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

எனது நடிப்புக்கு முதல் கமெண்ட் அம்மா, அப்பாவிடம் இருந்து வருவது ஏதோ பெரிய அவார்டு கொடுத்ததுபோல் இருக்கும். நடிகனாக அல்லாமல் சாதாரண மனிதனாக எனக்குள் நிறைய ஆசைகள், கோபம் உள்ளது. அதை திரைவடிவில் வெளிக்கொண்டுவர வாய்ப்பும், தயாரிப்பாளரும் கிடைத்தால் சினிமா இயக்குவேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us