/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீரசூடாமணிபட்டியில் பழமை மாறாத படையல்
/
வீரசூடாமணிபட்டியில் பழமை மாறாத படையல்
ADDED : ஆக 05, 2025 05:10 AM

மேலுார் : வீரசூடாமணி பட்டியில் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 8 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். கடைசி நாளான நேற்று கச்சிராயன்பட்டி, வீரசூடா மணிப்பட்டி கிராமத்தில் நேத்திக்கடன் நிறை வேறிய பக்தர்கள் 90க்கும் மேற்பட்ட ஆடுகள், 900க்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கை யாக கொடுத்தனர். பலர் முடி காணிக்கை செலுத்தினர்.
கோயில் முன்புள்ள பெரியகுளத்தில் ஆடு மற்றும் சேவல்கள் பலி யிடப்பட்டன. பின்பு மண் பானையில் ஆடு, சேவல் இறைச்சியை வைத்து வேப்ப இலைகளை போட்டு உப்பு போடாமல் அவித்து அம்மனுக்கு படையலிட்டனர்.
அதற்கு முன் மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கிய சர்க்கரையை முஸ்லிம்கள் சர்க்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்திய பின் பக்தர்களுக்கு வழங்கினர். காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையல் இட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
வேப்ப இலையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத் தக்கது.