ADDED : மார் 18, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா அலுவலகம் அருகே, கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்காததால், பாதுகாப்பாற்ற நிலை உள்ளது.
விஷஜந்துகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது.
மாலை நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்ட கால்நடை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

