ADDED : ஜன 24, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சியில் நாடக மேடையில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இங்குள்ள பேரூராட்சி அலுவலகம் எதிரே சந்தைமேடு பகுதி குழந்தைகளுக்காக பயன்பாட்டில் இருந்த அங்கன்வாடி மையம்  பத்தாண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் மையம் நாடக மேடையின் பின்பக்க அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லை. கட்டடத்தின் மேற்பூச்சுக்கள் பெயர்ந்துள்ளன.
மழை நீர் ஒழுகுகிறது. சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை பயன்படுத்த முடியாமல் சிலாப்பில் வைத்துள்ளனர். குறுகிய இடத்தில் உள்ளேயே சமையல் அறை உள்ளதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன் இடிந்த கட்டட கழிவுகள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

