ADDED : டிச 31, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கிடாரிப்பட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இதில் சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், கிடாரிப்பட்டி ஊராட்சி தலைவர் ஹேமலதா, பி.டி.ஒ., க்கள் சுந்தரசாமி, ரத்தின கலாவதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.