/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிப்படை வசதியில்லா அங்கன்வாடி மையம்
/
அடிப்படை வசதியில்லா அங்கன்வாடி மையம்
ADDED : ஜூன் 14, 2025 05:32 AM

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே கே. புதுார் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதி இல்லாததாலும், காம்பவுண்ட் சுவர் வெடிப்பு, கட்டடத்தில் தண்ணீர் கசிவாலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
இக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.6.50 லட்சத்தில் மையம் அமைக்கப்பட்டது. இங்கு கே. புதுார், களப்பாறை பகுதி குழந்தைகள் பலர் படிக்கின்றனர். மையத்தில் தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. காம்பவுண்ட் சுவர், மையத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த வெள்ளக்காளை கூறியதாவது : காம்பவுண்ட் சுவர் மற்றும். மையத்தின் பல பகுதிகளில் வெடிப்பும், காம்பவுண்ட் சுவரை சுற்றி மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். மையத்தின் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கி கட்டடம் முழுவதும் கசிகிறது. பிளாஸ்டிக் தொட்டி உடைந்துள்ளது. கழிப்பறை தேவைக்கு தண்ணீர் வசதி இல்லாமல் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். காம்பவுண்ட் சுவர், மையத்தின் உள்பகுதியில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.