UPDATED : நவ 22, 2026 11:22 PM
ADDED : நவ 22, 2026 11:22 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்பன், முருக பக்தர்களுக்கான அன்னதானம் தொடங்கப்பட்டது.
சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன், கோயில் துணை கமிஷனர் செல்வி ஆகியோர் வழிநடத்துதலின் பேரில் ஜன.,10 வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதனை சங்க மாவட்ட தலைவர் குருசாமி, துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் கோயில் நிர்வாகிகள் செழியன், சுமதி, முன்னாள் அறங்காவலர் பொம்மதேவன் தொடக்கி வைத்தனர்.
விசுவநாதன் கூறுகையில், மண்டல, மகர விளக்கு காலங்களில் சென்னை, பெரம்பலுார், கடலுார், திருச்சி, நீலகிரி, கோவை, மதுரை, தேனி, கன்னியாகுமரி உட்பட 19 இடங்களில் அன்னதானம், மருத்துவ சேவைகள் வழங்கப்படும். சென்னை, நாமக்கல் மாவட்டம் சார்பில் கேரள மாநிலத்தில் அன்னதானம் வழங்கப்படும் என்றார்.
