UPDATED : நவ 25, 2024 07:09 AM
ADDED : நவ 25, 2024 06:35 AM

மதுரை: சர்வதேச அரசியல் மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ள பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழகம் வருவது டிச.,1 வரை தள்ளிப் போவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை சர்வதேச அரசியல் மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ளார். இதற்காக ஆகஸ்ட் இறுதியில் லண்டன் சென்ற அவர் மூன்று மாதங்களாக அப்படிப்பை பயின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் படிப்புக்கான சான்றிதழைப் பெற்றார்.
அவர் நவ.,28ல் தமிழகம் வருவதற்காக விமான டிக்கெட் புக் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் கூடுதலாக சில நாட்கள் அங்கு தங்க வேண்டி இருப்பதால் டிச.,1 காலையில் தமிழகம் திரும்புவதற்காக டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் வரும்நாளில் சில நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், டிசம்பர் முதல் வாரம் டில்லி சென்று மாநில, மாவட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் பெற உள்ளார்.