ADDED : பிப் 11, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: குட்லாடம்பட்டி தியான மண்டப அண்ணாமலையார் கோயிலில் 13வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின.
பூஜைகளை ஆனந்தன் சுவாமி செய்தார்.
கோயில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் சுவாமி தியான லிங்கங்கள் மற்றும் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்தார்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜேஸ்வரி செய்திருந்தார்.

