ADDED : மார் 30, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். ஏஞ்சலின் சுகந்தி வரவேற்றார். தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக பி.இ.ஓ., மோசஸ் பெஞ்சமின், வட்டார வளமைய பயிற்றுநர் சரண்யா பங்கேற்றனர். சிறந்த மாணவர்களுக்கு தங்க, வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திவ்யா நன்றி கூறினார்.
