UPDATED : அக் 15, 2026 07:00 PM
ADDED : அக் 15, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழியக்கம் 9வது ஆண்டு துவக்க விழா தமிழியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக்நபி தலைமையில் நடந்தது.
தமிழாசிரியை வளர்மதி வரவேற்றார். தலைமையாசிரியர் சேகர், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி சிறப்புரையாற்றினர். இணைச் செயலாளர் அபுதாகீர், நகர் செயலாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் முரளி நன்றி கூறினார்.
