UPDATED : அக் 28, 2026 07:29 PM
ADDED : அக் 28, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை புதுார் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியின் 93வது ஆண்டு விழா மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது.
மேற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஷாஜஹான் முன்னிலை வகித்தார். தாளாளர் மெர்சி வரவேற்றார். தலைமையாசிரியை சகாயராணி ஆண்டறிக்கை வாசித்தார். பி.இ.ஓ., விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். லுார்தன்னை சர்ச் பாதிரியார் ஜார்ஜ் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
