ADDED : பிப் 08, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.புதுார் லுார்தன்னை சர்ச்சில் 105ம் ஆண்டு பெருவிழாவையொட்டி உயர்மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புச்சாமி தலைமையில் நேற்று கொடியேற்றப்பட்டது.
பங்கு பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், ஜஸ்டின், பிரபு, திருத்தொண்டர் அஜிலாஸ், சலேசியர்கள், கன்னியாஸ்திரீகள் முன்னிலை வகித்தனர். ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பேராயர் தனது உரையில், ''இறைமக்கள் இந்தாண்டில் துாய ஆவியின் கொடைகளைப் பெற்று அன்னையுடன் இணைந்து பங்கேற்று, புதிய ஆண்டை கடந்து செல்ல வேண்டும்'' என்றார்.