/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வக்புவாரிய பூட்டுக்கு போட்டியாக மற்றொரு பூட்டு
/
வக்புவாரிய பூட்டுக்கு போட்டியாக மற்றொரு பூட்டு
ADDED : டிச 18, 2024 05:51 AM
மதுரை : மதுரை தெற்குவாசல் சின்னக்கடை வீதியில் யாமுஹையத்தீப் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் தெற்குவெளிவீதியில் மீனா நுார்தீன் பள்ளிவாசல்உள்ளது. இவ்விரண்டையும் ஒரு நிர்வாகமே கவனித்து வருகிறது.
இதன் நிர்வாகிகள் மீது முறைகேடு புகார் எழுந்ததால் நிர்வாகத்தை கையகப்படுத்த வக்புவாரியம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் போலீஸ் பாதுகாப்புடன் தெற்குவாசல் பள்ளிவாசலில் உள்ள அலுவலகத்திற்கு வக்புவாரியம் பூட்டு போட்டு 'சீல்' வைத்தது.
வக்புவாரியம் போட்ட பூட்டுக்கு போட்டியாக பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் இருந்து அன்றிரவு மற்றொரு பூட்டு போடப்பட்டது.
பள்ளிவாசலை வக்புவாரியம் நிர்வகிப்பதா அல்லது தற்போதுள்ள ஜமாத் நிர்வாகமே நிர்வகிப்பதா என தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வருகிறது. நாளை(டிச.19) விசாரணை நடக்கிறது. தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை அமையும் என இருதரப்பும் தெரிவித்தனர்.