/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி
/
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மேலும் ஒரு பார்வையாளர் பலி
ADDED : ஜன 22, 2025 04:50 AM

அலங்காநல்லுார் : தேனி மாவட்டம் அரண்மனை புதுார் செல்வமுருகன் 46. சோலார் பேனல் தொழில் செய்கிறார். ஜன.,16ல் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தார். காளைகள் சேகரிக்கும் பகுதியில் காளை மார்பில் முட்டியதில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி அன்று காளைகள் சேகரிக்கும் பகுதியில் காளை முட்டியதில் மேட்டுப் பட்டி பெரியசாமி 62, இறந்தார். வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 72 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி அலங்காநல்லுாரில் இருந்து தனிச்சியம் வழியாக விமான நிலையம் சென்றார்.
அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலையில் அவரை பின்தொடர்ந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த சித்தாலங்குடி கூலித் தொழிலாளி ராஜேந்திரன் 60, இறந்தார்.