sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லஞ்ச ஒழிப்பு போலீசிடமே லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

/

லஞ்ச ஒழிப்பு போலீசிடமே லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசிடமே லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசிடமே லஞ்சம் பெற்ற இன்ஜினியர் கைது

7


ADDED : பிப் 23, 2024 06:32 AM

Google News

ADDED : பிப் 23, 2024 06:32 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா காவாகுளத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவர், காவாகுளத்தில் மனைவி பிரதீபா பெயரில் உள்ள வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு சிக்கல் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி மின்பொறியாளர் மலைச்சாமி 49, என்பவரை அணுகினார்.

அவர், 'மின் இணைப்புக்கு, 12,000 ரூபாய் செலவாகும். ஆன்லைன் பதிவு கட்டணம், 5,192 ரூபாய் போக, மீதப்பணம் எனக்கு லஞ்சமாக வேண்டும்' என, கேட்டுள்ளார்.

தர விரும்பாத அம்மாசி, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் குமரேசனிடம் புகார் செய்தார். நேற்று மாலை, சிக்கல் மின்வாரிய அலுவலகத்தில் மலைச்சாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அம்மாசி கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் மலைச்சாமியை கைது செய்தனர்.

கும்பாபிஷேக பணம் ரூ.17 லட்சம் திருட்டு


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில், விட்டல் ருக்மணி சமஸ்தான கோவிலில் மேனேஜராக பணியாற்றுபவர் சந்திரசேகரன், 48. இவர் நேற்று கோவில் கும்பாபிஷேகத்திற்காக, கும்பகோணத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் இருந்து 17 லட்சம் ரூபாயை எடுத்து காரில் பாதுகாப்பாக வைத்தார்.

பின், கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள காபித்துாள் கடைக்குச் சென்று, காபித் துாள் வாங்கிக் கொண்டு காரில் ஏறிய போது, 17 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்த பை திருடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து, உடனே, கும்பகோணம் கிழக்கு போலீசில், சந்திரசேகரன் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

கணவரை கொலை செய்த மனைவி, மகனுக்கு ஆயுள்


தேனி மாவட்டம் போடி அருகே போதையில் அடித்து துன்புறுத்திய கணவரை கல்லால் குத்தி கொலை செய்த மனைவி செலின்மேரி 52, அவரது மகன் ராஜ்குமார் 32, ஆகியோருக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 31 ஆண்டுகள் சிறை


தேனி மாவட்டம் கூடலுாரில் தெருவில் விளையாடிய ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முடி திருத்தும் தொழிலாளி கோபாலகிருஷ்ணனுக்கு 61, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

பரோட்டாவுக்காக ரகளை; இருவருக்கு குண்டாஸ்


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஓட்டலில் பரோட்டா தீர்ந்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உரிமையாளர் அப்துல் லத்தீப்பை 45, ஜன.,21 இரவு 10:30 மணியளவில் தாக்கினர்.

அப்துல் லத்தீப் மீது கல்லாப்பெட்டியை தள்ளி சேதப்படுத்தியதுடன் தண்ணீர் டிரம்மில் அமுக்கினர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் லத்தீப் போலீசில் புகார் அளித்தார். அப்துல் லத்தீப் தாக்கப்பட்ட காட்சி வைரலானது.

இதில் ஈடுபட்ட சாயல்குடி தமிழரசன் 32, கூரான்கோட்டை சக்திவேல் 31, ஜெகதாபட்டினம் மணிகண்டன் 29, ராஜீவ் காந்தி 28, ஆகியோரை போலீசார்கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதில் தமிழரசன், சக்திவேல் ஆகியோர்குண்டாஸில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதி கழிப்பறையில் மாணவி தற்கொலை


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தனியார் தோட்டக்கலை கல்லுாரி விடுதி கழிப்பறையில் மாணவி கலை நித்யா 21, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை தொழிலதிபர் கடத்தல்


சென்னை தொழிலதிபர் கார்த்திகேயனை கடத்தி கார், நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். மூன்று கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

மதுரையில் ரூ.100 கோடி போதை பொருள் பறிமுதல்


மதுரை கே.கே.நகர் வித்யா காலனியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, 57; பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரி. இவரது வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், போலீசார் நடத்திய சோதனையில் பவுடர் மற்றும் திரவ வடிவிலான 20 கிலோ பொருளை பறிமுதல் செய்து, ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமீம் அன்சாரிக்கு சென்னையைச் சேர்ந்த அன்பு நெருங்கிய நண்பர். சமீபத்தில் மதுரை வந்த அன்பு, 'கெமிக்கல்' என்றுக்கூறி போதைப்பொருளை வைத்துவிட்டு சென்றதாக தமீம் அன்சாரி கூறுகிறார். அவரிடம் விசாரணை நடக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் 'மெத்தம் பெட்டமைன்' மாதிரி தெரிகிறது. இதன் சர்வதேச மதிப்பு 1 கிலோ 5 கோடி ரூபாய். அன்புவை தேடி தனிப்படை சென்றுள்ளது. இவ்வாறு கூறினர்.

அண்ணன் ஆட்சியில் தங்கை கைது


ஆந்திராவில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து, அந்த மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான, ஒய்.எஸ். ஷர்மிளா, கட்சி அலுவலகத்திலேயே இரவு முழுதும் தங்கிய நிலையில், நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us