/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்

ADDED : அக் 18, 2025 05:31 AM

-திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ் பிரபு, சூரியகலா, பாரதி பிரியா மற்றும் போலீசார் நேற்று மதியம் 3:00 மணிக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) மலர்மன்னனிடமிருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திர கலாவின் அறைக்கு வெளியில் இருந்து கணக்கில் வராத ரூ.37 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டது.
உதவியாளர் கார்த்திகா மேஜையில் இருந்து ரூ.10 ஆயிரம், மேலும் அலுவலக ஊழியர்கள் ஆறு பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.6 ஆயிரம், அலுவலக பொதுப்பிரிவில் கிடந்த ரூ. 12 ஆயிரம் என ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.