ADDED : ஆக 29, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இண்டாஸ் அறக்கட்டளை, மாவட்ட சுகாதாரத் துறை இணைந்து, கிராம சுகாதார செவிலியர்களுக்கான ரத்த உறையாமை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், ரத்த உறையாமை நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கிவரும் சிகிச்சைகள், மருத்துவ சேவைகள் குறித்து விளக்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், ரத்த உறையாமை நோயாளிகளை கிராமங்களில் கண்டறியும் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்தவியல், குழந்தை புற்றுநோய்களுக்கான துறைத் தலைவர் காசிவிஸ்வநாதன், நோயின் வரலாறு, வகைகள், அறிகுறிகள், அணுகுமுறை, சிகிச்சை முறை, மருந்து வகை, சேவை குறித்து எடுத்துரைத்தார்.

