ADDED : ஜன 13, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பெருங்கோட்ட பா.ஜ., பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள். கடந்த ஒருமாதமாக மதுரை லோக்சபா தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
தற்போது இவரை, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் தொகுதிகளுக்கான பொறுப்பாளராக நியமித்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
1985 முதல் ஏ.பி.வி.பி., உறுப்பினராக இருந்த இவர், 6 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில தலைவராக பணியாற்றினார். பா.ஜ.,வின் மாநில, தேசிய செயற்குழுவில் இருந்துள்ளார்.