நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மயிலாடுதுறையில் நடந்தது.
இதில் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி மோனிகா 64 - -66 கிலோ எடை பிரிவில் 3ம் இடம் பிடித்தார். அவரை தலைமை ஆசிரியை விமலா தேவி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

