ADDED : மார் 19, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மதுரையில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை ப்ரெசிடென்சி சார்பில் சங்க கூட்டம் நடந்தது.
தலைவர் பாண்டி தலைமை வகித்தார். இதில் சர்வதேச, மாநில, மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வென்ற மேலுார் ஒன்றியம் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மூன்று, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குருபாண்டியன், வேதாஸ்ரீ, யாகஸ்ரீ, இஸ்பாடுஜானா ஆகிய மாணவர்களையும், பயிற்சியாளர் செந்தில்குமாரையும் பாராட்டி கவுரவித்தனர்.
மேலும் இப் பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்க ரூ.50 ஆயிரம் வழங்கினர்.

