நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரிக்கு நாக் தர மதிப்பீட்டில் 'ஏ' கிரேடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்காக சிறப்பாக பணியாற்றிய முதல்வர், பேராசிரியர்கள், நாக் குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர், நாக் குழுவினர், அனைத்து பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், முரளிதாஸ், வெங்கடேஸ்வரன், ராமசுப்பிரமணியன் பாராட்டினர். கல்லுாரி உள்தர மதிப்பீட்டுக் குழு அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார், வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி, விளையாட்டுத் துறை தலைவர் ரவீந்திரன் ஒருங்கிணைத்தனர்.

