/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
/
மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 07, 2026 05:19 AM
மதுரை: சுகாதாரத்துறை சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பணியாற்றிய டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாராட்டு விழா தமுக்கம் மைதானத்தில் நடந்தது.
கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன், பேராசிரியர் செந்தில், நிலைய மருத்துவ அலுவலர்கள் முரளிதரன், சரவணன், மருத்துவ இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், காசநோய், தொழுநோய், குடும்ப கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குநர்கள் ராஜசேகரன், விஜயன், நடராஜன், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சிவராமபாண்டியன் ஆகியோருக்கு அமைச்சர் மூர்த்தி விருது வழங்கினார்.
அவர் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனை என்றால் தர்மாஸ்பத்திரி, கடமைக்கு தான் சிகிச்சை இருக்கும் என்று மக்கள் நினைத்தனர். தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை, சுகாதாரமான கட்டடங்கள் என அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
மதுரையில் மட்டும் நடந்த 43 சிறப்பு மருத்துவ முகாம்களில் முழு உடல் பரிசோதனை உட்பட 56 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். விருதுபெற வந்துள்ள மருத்துவ பணியாளர்களில் 95 சதவீதம் பேர் பெண்களாக இருப்பது பெருமை என்றார்.

