UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:14 PM
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், வந்தான்விடுதி ராஜாத்தி. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
வந்தான்விடுதி மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்ய கலெக்டர், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ‘முன் மக்கள் விட்டுக்கொடுத்து வாழ்ந்தனர். தற்போது மனப்பான்மை மாறிவிட்டது. அரசு நிலம் இல்லாவிடில், தனியாரிடம் கையகப்படுத்தி சாலை வசதி ஏற்படுத்தலாம். அதிகாரிகள் இரும்பு மனிதர்களா? மனிதநேயம் வேண்டாமா? மயான சாலைக்காக நீதிமன்றத்தை அணுக விடலாமா?’ என்றனர். இதையடுத்து, இந்த வழக்கை, இதுபோன்ற நிவாரணம் கோரி, நிலுவையிலுள்ள மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரிக்க, நவ., 17க்கு ஒத்திவைத்தனர்.
