ADDED : ஆக 11, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுார்: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த மாநாட்டில் கலவரத்தை துாண்டும் வகையில் பேசியோரை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான வழக்கை கைவிடக்கோரியும் புதுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வழியே டூவீலரில் வந்த சிலர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டு தப்பினர். இதனால் தங்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக போலீசாருடன் கூட்டமைப்பினர் வாக்குவாதம் செய்தனர்.