/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழிலாளி தற்கொலை செய்ததாக பதிவான வழக்கில் ராணுவ வீரர் கைது
/
தொழிலாளி தற்கொலை செய்ததாக பதிவான வழக்கில் ராணுவ வீரர் கைது
தொழிலாளி தற்கொலை செய்ததாக பதிவான வழக்கில் ராணுவ வீரர் கைது
தொழிலாளி தற்கொலை செய்ததாக பதிவான வழக்கில் ராணுவ வீரர் கைது
ADDED : நவ 09, 2024 06:15 AM
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஓராண்டுக்கு பிறகு ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே சாத்தங்குடி ராஜபாண்டி 27. கூலித்தொழிலாளி. இவர் கடந்தாண்டு ஆக., 6ல் சாத்தங்குடி அருகே புலியூர் கண்மாயில் இறந்து கிடந்தார். குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கை முடித்தனர்.
அக். மாதம் சாத்தான்குடியில் சப்பரத் திருவிழா நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு போலீசார் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இது சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ராணுவ வீரர் மருதுபாண்டி 32, உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
எதிர் தரப்பினர் 'ராஜபாண்டி தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்தது விடுமுறையில் ஊருக்கு வந்த மருதுபாண்டி' என புகார் அளித்தனர்.
மருதுபாண்டியை விசாரித்த போலீசார் கூறியதாவது:
மருதுபாண்டி குடும்பத்திற்கும் ராஜபாண்டி குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்தாண்டு விடுமுறையில் ஊருக்கு வந்த மருதுபாண்டி, பிரச்னை தொடர்பாக ராஜபாண்டியிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். இதையடுத்து அவரை புலியூர் கண்மாய்க்கு அழைத்துச் சென்று இருவரும் மது அருந்தி உள்ளனர். ராஜபாண்டிக்கு கொடுத்த மதுவில் விஷம் கலந்து இருந்ததால் அவர் இறந்துவிட்டார் என்றனர்.