ADDED : செப் 24, 2024 06:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்:மேலூர் அருகே கல்லபட்டியை சேர்ந்த 14 வயது சிறுமி மதுரையில் தனியார் பள்ளியில் தங்கி பத்தாம் வகுப்பு படிக்கிறார். செப். 20 விடுமுறைக்கு கல்லம்பட்டிக்கு வந்தார்.
இவரது வீட்டில் இருந்தவர்கள் தேங்காய் வியாபாரத்திற்காக வெளியே சென்றிருந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அருண்குமார் 18, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்தார்.

