நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் கணேசன் மகன் லோகேஸ்வரன் 21. இவர் மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜனின் வீடு, அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவராக போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கமிஷனர் லோகநாதன் உத்தரவில் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.