/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க சிறப்பு பஸ்கள் வருகை
/
மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க சிறப்பு பஸ்கள் வருகை
மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க சிறப்பு பஸ்கள் வருகை
மதுரையில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க சிறப்பு பஸ்கள் வருகை
ADDED : அக் 16, 2024 03:59 AM

மதுரை: மதுரையில் மாற்றுத் திறனாளிகள் வீல்சேருடன் பயணிக்கும் வகையில் புதிதாக தாழ்தள சிறப்பு பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது.
மதுரை மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் 16 டிப்போக்களில் 960 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல நீண்ட காலமாக இயங்கி வருவதால் ஓட்டை உடைசலாகவும், மழை நேரத்தில் ஒழுகுபவையாகவும் உள்ளன. இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி புதிய பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கென தாழ்தள சிறப்பு பஸ்களை இயக்க மதுரை போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தாண்டு மதுரைக்கு மொத்தம் 168 தாழ்தள பஸ்களை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இவற்றில் 33 பஸ்கள் விரைவில் மதுரை வர உள்ளன. இதிலும் முதற்கட்டமாக 20 பஸ்கள் சமீபத்தில் மதுரை வந்து விட்டன.
மதுரை கோட்ட மேலாண் இயக்குனர் சிங்காரவேலு, வர்த்த உதவி மேலாளர் யுவராஜா ஏற்பாட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுக்கான நடவடிக்கையில் உள்ளது.
இவ்வாகனங்கள் தலா ரூ.ஒரு கோடி மதிப்புள்ளவை. இவை வீல்சேருடன் வரும் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் வகையில் இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்டாப்பில் பஸ் வந்து நின்றதும். அதில் இருந்து சறுக்குப்பலகை கீழிறங்கும்.
அதில் மாற்றுத்திறனாளி வீல்சேருடன் ஏறியதும், பஸ்சினுள் அதனை உரிய இடத்தில் நிறுத்தி 'பெல்ட்' டால் வீல்சேர் நகராமல் இறுக்கமாக கட்டி வைக்கப்பர் இதற்கு பஸ்சின் நடத்துனர் உதவுவார். இந்த பஸ்சில் மற்ற பயணிகளும் பயணிப்பர். இந்த வாகனங்களை விரைவில் இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.