/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
/
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
ADDED : அக் 04, 2025 05:16 AM
அவனியாபுரம்: சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைமதுரை வந்தார். அவரிடம், பா.ஜ., வின் 'ஏ டீம்' தி.மு.க.,' என சீமான் கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் இந்த கேள்வியை கவனிக்காமல், அண்ணாமலை கோபமாக கூறியதாவது:
விஜய்யிடம் கேளுங்கள். அவரைத் தவிர அனைவரும் பேசுகிறார்கள்.
த. வெ.க., நிர்வாகிகளிடம் கேளுங்கள்; நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபிசர்களா. தைரியம் இருந்தால் நீங்கள் த.வெ.க., நிர்வாகிகள் அல்லது அவர்களின் பேச்சாளர்களிடம் கேட்க வேண்டும். சென்னை, மதுரை என அனைத்து இடங்களிலும் நொச்சி, நொச்சி என இதே கேள்வியை கேட்கிறீர்கள். சொல்ல வேண்டிய கருத்துக்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க வேண்டும். இவ்வாறு கூறிக்கொண்டே காரில் ஏறிச்சென்றார்.