ADDED : செப் 23, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் சங்கம மதுரை கிளை சார்பில் சங்க கூட்டம், கண்பரிசோதனை முகாம் வேளாண் கல்லுாரியில் நடந்தது.
கிளைத் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். வாசன் கண் மருத்துவமனை டாக்டர் கோமதி ரம்யா கண்பாதுகாப்பு முறைகளை விளக்கினார். செயலாளர் சேவுகபெருமாள், பொருளாளர் சிதம்பரம், பி.ஆர்.ஓ., விவேகானந்தன் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.
