ADDED : ஏப் 25, 2026 04:25 PM
மதுரை: மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 10வது வார்டில் தேர்தலன்று பூத்தில் தி.மு.க.,வுக்காக சிலர் விதிமீறி ஓட்டு சேகரித்தனர். இதை அப்பகுதி அ.தி.மு.க., வட்ட செயலாளர் மாரி என்பவரின் கணவர் ஆனந்தப்பன் உள்ளிட்டோர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு சம்பக்குளம் பகுதியில் வந்த ஆனந்தப்பன் உட்பட இருவரை தி.மு.க.,வினர் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து அ.தி.மு.க., வேட்பாளரும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன், அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். முன்னதாக பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட அழகர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். வட்ட செயலாளர் மாயத்தேவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
