ADDED : மார் 15, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: குட்லாடம்பட்டி கிராம மந்தையில் விநாயகர், முத்தாலம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.
நேற்று ஒரு தரப்பினர் திடீரென கோயில் கட்ட போவதாக கூறி கடப்பாரை, மண்வெட்டி உடன் வந்து குழி தோண்ட முயற்சித்தனர். வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (மார்ச் 16) வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி யதை தொடர்ந்து கலைந்தனர்.
