/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் கைகோர்க்கும் ஆக்லாந்து பல்கலை
/
மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் கைகோர்க்கும் ஆக்லாந்து பல்கலை
மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் கைகோர்க்கும் ஆக்லாந்து பல்கலை
மீனாட்சி மிஷன் மருத்துவமனையுடன் கைகோர்க்கும் ஆக்லாந்து பல்கலை
ADDED : ஜன 20, 2025 05:40 AM

மதுரை: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உடல்நல பராமரிப்புக்கான ஆராய்ச்சி, மருத்துவக் கல்வியில் உலகளாவிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நியூசிலாந்தின் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலையுடன் கூட்டாண்மை வாய்ப்பை பரிசீலித்து வருகின்றனர்.
இதையடுத்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மைய தலைவர் குருசங்கர், காமினி குருசங்கர், ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலை பிரதிநிதிகள் குழு இடையே உயர்நிலை கூட்டம் நடந்தது. பேராசிரியர்கள் பிரெட் கோவன், ஜான் தேவார், சோனல் டொலாக்கியா, ஆஸ்திரேலியா ஆலோசகர் தேவ் தத்தா பங்கேற்றனர்.
அவர்கள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை, மீனாட்சி செவிலியர் கல்லுாரி ஆகியவற்றையும் பார்வையிட்டனர். நிர்வாக அதிகாரிகள், பணியாளர்களுடன் விவாதித்து, சுகாதாரக் கல்வி, ஆராய்ச்சியில் புத்தாக்கம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குறித்து ஆராய்ந்தனர்.
டாக்டர் குருசங்கர் கூறியதாவது: அனைத்து தரப்பினருக்கும் உலகத்தரத்தில் உடல்நல பராமரிப்பு, மருத்துவ கல்வி வழங்க திட்டம் உள்ளது. இதில் ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலையின் ஒத்துழைப்பும் ஒரு நடவடிக்கை. இக்கூட்டாண்மை மூலம் அறிவு பரிமாற்றம், ஆராய்ச்சியில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதும், மாணவர், ஆசிரியர், பணியாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி வழங்குவது நோக்கம் என்றார்.