/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'எய்ம்ஸ்' வளாகத்தில் 314 மரங்கள் அகற்ற ஏலம்
/
'எய்ம்ஸ்' வளாகத்தில் 314 மரங்கள் அகற்ற ஏலம்
ADDED : பிப் 23, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அருகே கோ.புதுப்பட்டியில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இப்பணிகள் நடக்க உள்ள நிலங்களில் 314 மரங்கள் அகற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
கடந்த நவம்பரில் மாவட்ட பசுமைக்குழுக் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அதில் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்ற அனுமதி வழங்கப்பட்டது. மரங்களை அகற்ற விருப்பம் உள்ளவர்கள், நாளை (பிப்.,24) காலை 11:00 மணிக்கு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஏலத்தில் நேரடியாக பங்கேற்கலாம் என தாசில்தார் அனீஷ்சத்தார் தெரிவித்தார்.