/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்வி அலுவலகங்களில் நாளை தணிக்கை பணி
/
கல்வி அலுவலகங்களில் நாளை தணிக்கை பணி
ADDED : பிப் 20, 2025 05:40 AM
மதுரை: மதுரையில் கல்வி அலுவலகங்களில் தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கூட்டு அமர்வு நாளை (பிப்.,21) இரண்டாம் கட்டமாக நடக்கிறது. இதையொட்டி உரிய ஆவணங்களை தயார் செய்ய கல்வித்துறையின் நிதி ஆலோசகரும் முதன்மை கணக்கு அலுவலருமான லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கில வழி கட்டணம், கணினி கட்டணம், டிசி தேடு கூலி, சிறப்பு கட்டணம், விளையாட்டு கட்டணம், நன்கொடை விண்ணப்பம் என 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இவை குறித்து ஆண்டுதோறும் தணிக்கை மேற்கொண்டு தணிக்கை தடைகள் சரிசெய்யப்படுவதற்கான கூட்டு அமர்வு நடக்கும்.
மதுரையில் இரண்டாம் கட்ட அமர்வு நாளையும், பிப்.28ம் நடக்கிறது. இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர்கள் அருணாசலம், பாண்டியம்மாள் கண்காணிப்பில் தணிக்கை பணி மேற்கொள்ளப்படும். உரிய ஆவணங்களுடன் அலுவலர்கள் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

