ADDED : ஆக 16, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கிரைம் பிராஞ்ச் அருகே காஜிமார் தெருவில் குப்பைத் தொட்டி அருகே ஒரு மஞ்சள் நிற துணிப்பை கிடந்ததை அவ்வழியே வந்த ஆட்டோ டிரைவர் சீனிவாசன் பார்த்தார்.
அதை திறந்து பார்த்தபோது பத்தரை பவுன் மதிப்புள்ள நகைகள் இருந்தன. அதை திடீர்நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார். நகையை தவறவிட்டவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
