தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தானியங்கி மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முறை

 தானியங்கி மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முறை

 தானியங்கி மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முறை


ADDED : மார் 12, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து ஒழுங்குபடுத்தும் முறையை கமிஷனர் லோகநாதன் அறிமுகப்படுத்தினார்.

நகரில் தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை படம் பிடித்து இ சலான் மூலம் அபதாரம் விதித்து உரிமையாளர்களுக்கு அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் (ஏ.என்.பி.ஆர்.,) முறை அமலில் உள்ளது. இதன்மூலம் ரோடுகளில் செல்வோரின் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதே கேமராக்கள் மூலம் போக்குவரத்து இயக்கங்களை கண்காணித்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களை கண்டறிந்து தேவையான போக்குவரத்து ஒழுங்குமுறை மேற்கொள்ளும் வசதி நேற்றுமுதல் துவங்கியுள்ளது.

இதன் மூலம் பதிவாகும் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உரிய வாகன வழக்குகள் பதிவு செய்யப்படும். எனவே வாகன ஓட்டிகள் உரிய போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us