ADDED : ஜூன் 12, 2026 06:49 AM

அ நிறம் | அளவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், காலணி பாதுகாக்கும் இடத்தில் தன் செருப்பை வைத்துவிட்டு, மொபைல் போனை பாதுகாப்பு அறையில் ஒப்படைத்துவிட்டு, சாதாரணமாக பக்தர்கள் செல்லும் வரிசையில் சென்று தரிசனம் செய்தார்.
பிரசாதம் தயாரிக்கும் இடம், கும்பாபிஷேக கட்டுமான பணிகள், பக்தர்கள் செல்லும் வரிசையில் ஆய்வு செய்த பின், பேட்டி அளித்த அமைச்சர், ''மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மூன்று மாதங்களில் நடத்தப்படும்.
''இவ்விழாவை திட்டமிட்ட தேதி, நாளில் நடத்த வேண்டும் என்பதால், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக தேதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.
