ADDED : செப் 26, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் சிறப்பாக பணிபுரிந்த 170 ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விருது, பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
வகுப்பறையில் கற்றல், கற்பித்தலை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் பூங்கொத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட 170 துவக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் விருது வழங்கினார். அவர் பேசுகையில், ‛‛இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த கட்டமாக விருது வழங்கப்படும்,’’ என்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரகுபதி, கணேசன், தென்கரை முத்து, செந்தில்குமார், சரவணமுருகன் பேசினர்.
