/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு விருது
/
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு விருது
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு விருது
ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரிக்கு விருது
ADDED : ஜூலை 27, 2025 07:22 AM
மதுரை: சென்னையில் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் தாக்கம் குறித்த மாநாட்டில் தேசிய கற்றல் விருதை ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி வென்றது.
சென்னையில் ஐ.சி.யு., அகாடமி 64வது மாநாடு நடந்தது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வழி தொழில் நுட்பத்திறன்களை சுயமாக மேம்படுத்திக் கொள்வதற்காக மைக்ரோசாப்ட், பென்ட்லீ நிறுவனங்களுடன் இணைந்து சான்றிதழ் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. இதில் முத்தாயம்மாள் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெற்று செயல்திறன், சாதனைக்கான சுய கற்றல் விருதை பெற்றனர்.
விருதை கல்லுாரி சார்பில் முத்தாயம்மாள் கல்விக்குழும டிரஸ்ட் மற்றும் ஆய்வு பவுண்டேஷன் இணைச்செயலாளர் ராகுல் பெற்றார். செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் துறைத்தலைவர் விஜயராகவன், திறன் மேம்பாட்டுத் துறைத்தலைவர் நோபிள் தாஸ் உடனிருந்தனர். வெற்றிபெற்றகளை தாளாளர் கந்தசாமி, செயலாளர் குணசேகரன், நிர்வாகக் குழு உறுப்பினர் உமாராணி வாழ்த்தினர்.

