ADDED : மார் 16, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; மேலுாரில் துருவம் அமைப்பு, விஜயா பதிப்பகம் மற்றும் ஜாஸ் பள்ளி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அன்பில் தொடங்கி ஆளுமை வரை என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
பதிப்பகம் நிர்வாகி வேலாயுதம் வரவேற்றார். சமூக சேவகர் காமாட்சி, கவிஞர்கள் இன்பா, ரவி சுப்பிரமணியன், டாக்டர்கள் சசித்ரா, மேனகா, பத்திரிகையாளர் ரோஜா வள்ளிக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். சாதனையாளர்களுக்கு முரளி விருது வழங்கி கவுரவித்தார்.
அமைப்பின் சார்பில் மேலுார் ஜெய்வீர் சிறப்பு பள்ளியின் வளர்ச்சிக்காக ரு.50 ஆயிரம் பள்ளி நிர்வாகி சிந்துவிடம் வழங்கினர். நிர்வாகி ப்ரீத்தி நன்றி கூறினார்.